மத்திய கிழக்கு போர்: வலுசக்தி நெருக்கடியைச் சமாளிக்க ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Iran-Israel War
By Rakesh Mar 16, 2026 01:20 AM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் நேற்று(15.03.2026) பிற்பகல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டம்!

இலங்கையில் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டம்!

பொருளாதார பாதிப்பு

மத்திய கிழக்குப் போரினால் நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் உள்ளிட்ட வலுசக்தி விநியோகக் கட்டமைப்புக்களுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் அந்தத் தடைகளை எதிர்கொண்டு தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு துறையினராலும் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள மாற்று வழிகள் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

மத்திய கிழக்கு போர்: வலுசக்தி நெருக்கடியைச் சமாளிக்க ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு! | Presidential Review To Address Energy Crisis

இந்த நிலைமையானது இலங்கைக்கு மாத்திரமன்றி உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனை எதிர்கொள்வதில் டிஜிட்டல் குறியீட்டு முறை, வீட்டிலிருந்து பணியாற்றுதல் போன்ற மாற்று வழிமுறைகளை முறையான திட்டமிடலுடன் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைத்துக்கொள்ள முடியும் எனச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், உருவாகி வரும் புதிய நிலைமைகள் குறித்து மக்களுக்குத் தொடர்ச்சியாகத் தெளிவுபடுத்தும் முறையான தகவல் தொடர்பு முறையைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

டிஜிட்டல் குறியீட்டு முறையில் எரிபொருள் விநியோகம்

தற்போது நடைமுறையிலுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறையின் கீழ், இதற்கு முன்னர் பதிவு செய்யாத நபர்களுக்கு ஏற்பட்டுள்ள தடைகளை விரைவாக நீக்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அரச மற்றும் தனியார் துறைகளை ஒன்றிணைத்து கைத்தொழில் துறையில் ஏற்படும் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மத்திய கிழக்கு போர்: வலுசக்தி நெருக்கடியைச் சமாளிக்க ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு! | Presidential Review To Address Energy Crisis

தற்போதைய சூழலானது கடந்த கொரோனா காலப்பகுதியை விடவும் மாறுபட்டது என்பதால், புதிய நிலைமைக்கு ஏற்றவாறு மாற்று நடவடிக்கைகளைப் பின்பற்றி எரிபொருள் சிக்கன முறைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

மத்திய கிழக்குப் போர்ச் சூழலில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை முறையாகக் கண்காணித்து, தேசிய பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கான மாற்று வழிகள் குறித்து தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த, வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதார ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய, ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜானக ராஜகருணா, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வடக்கிற்கு அனுரவின் முடிவு - பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு விவகாரம்

வடக்கிற்கு அனுரவின் முடிவு - பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு விவகாரம்

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!


2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US