பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த ஜனாதிபதி திட்டம்: சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lanka Government
By Rakesh Mar 11, 2026 12:21 PM GMT
Report

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக புதிய தேசியக் கொள்கையொன்றை அரசு தற்போது தயாரித்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 199 சாரதிகள் மற்றும் 342 நடத்துநர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(10.03.2026) அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீர் கட்டணமும் உயருமா..! அரசத்தரப்பு முக்கிய அறிவிப்பு

நீர் கட்டணமும் உயருமா..! அரசத்தரப்பு முக்கிய அறிவிப்பு

புதிய பேருந்துகள் கொள்வனவு

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

"தற்போதுள்ள பழைய பேருந்துகளை படிப்படியாக அகற்றிவிட்டு, தரமான புதிய பேருந்துகளைச் சேவையில் இணைப்பதற்கான திட்டங்கள் தயாராகி வருகின்றன. இதனை ஒரே நாளில் செய்துவிட முடியாது என்றாலும், அடுத்த சில ஆண்டுகளில் திட்டமிட்ட வகையில் இதனைச் செயல்படுத்துவதன் மூலம் தரமான பேருந்து சேவையை உறுதிப்படுத்த முடியும்.

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த ஜனாதிபதி திட்டம்: சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Presidential Plan To Improve Public Transportation

இதன் முதற்கட்டமாக ஜப்பான் அரசிடமிருந்து இந்த மாதம் 8 புதிய பேருந்துகள் கிடைக்கவுள்ளன. அத்துடன், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மேலும் புதிய பேருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

பொதுப் போக்குவரத்துச் சேவையில் நிலவும் நம்பிக்கையற்ற தன்மை காரணமாகவே மக்கள் தமது வருமானத்தில் பெரும் பகுதியைச் செலவிட்டு மோட்டார் சைக்கிள்களையும் கார்களையும் வாங்குகின்றனர். வலுவான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் இந்தச் சுமையைக் குறைக்க முடியும்.

இது வாகன இறக்குமதிக்கான அந்நியச் செலாவணி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதுடன், நகர்ப்புற போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசடைவுக்கும் தீர்வாக அமையும்.

சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் நடத்தை ஒரு நிறுவனத்தின் நற்பெயரைத் தீர்மானிக்கின்றது.

சாரதிகளுக்கு எச்சரிக்கை

போதைப்பொருள் பாவனையாளர்கள் எவருக்கும் வாகனங்களைச் செலுத்த இடமளிக்க முடியாது. மக்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்களின் கைகளிலேயே உள்ளது.

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த ஜனாதிபதி திட்டம்: சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Presidential Plan To Improve Public Transportation

எனவே, இ.போ.சபைக்குள் புதியதொரு கலாசாரத்தை உருவாக்குவதற்குப் புதிய நியமனங்களைப் பெற்ற நீங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். தனியார் பேருந்து சேவையை வெறும் இலாபம் ஈட்டும் தொழிலாக மட்டும் பார்க்காமல், அதனையும் ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டுவர அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இதற்காக வலய ரீதியிலான பேருந்து நிறுவனங்களை உருவாக்கி, அதில் தனியார் பேருந்து உரிமையாளர்களை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், நட்டத்தில் இயங்கும் கிராமப்புற வீதிகளின் போக்குவரத்துச் சேவையைப் பராமரிக்க இந்த வரவு செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வி்டுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வி்டுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் 20 முதல் 30 சதவீதம் அதிகரிக்கும் மின் கட்டணம்..! கொழும்பில் பகிரங்க தகவல்

இலங்கையில் 20 முதல் 30 சதவீதம் அதிகரிக்கும் மின் கட்டணம்..! கொழும்பில் பகிரங்க தகவல்

GalleryGallery
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US