தேர்தல் சட்டத்தை மீறும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை ஜனாதிபதியின் தீர்மானங்கள், செயற்பாடுகள் மற்றும் செய்தி அறிவிப்புகளை அறிவிக்கும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு, தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொதுப் பிரசாரங்களை அறிவித்தால், அது தேர்தல் சட்டத்தை மீறும் மற்றும் அரச வளங்களை துஸ்பிரயோகம் செய்ததாக கருதப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் தேர்தல் ஆணையகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இந்த கருத்தை வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை காலியில் இடம்பெறும் பொதுக்கூட்டம் தொடர்பில், ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு, ஊடகங்களுக்கு அறிவித்தமைக்கு எதிராக, தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை( பெப்ரல்) அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செய்தி
ஜனாதிபதியின் செய்திகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து உள்ளூர் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வட்ஸ்அப் குழுக்களின் வலையமைப்பின் ஊடாக இந்த பொதுகூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது, தேர்தல் சட்டப்படி, அரச வளங்களை துஸ்;பிரயோகம் செய்தமை தொடர்பிலான குற்றமாகும் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை¸அரச அமைப்புக்கள், ஜனாதிபதி, பிரதமர் அல்லது அமைச்சர்களுடன் தொடர்புடைய ஊடகப் பிரிவுகள், தேர்தலின் போது மேலதிகாரிகளுக்கு தனிப்பட்ட விளம்பரங்களை வழங்கவோ அல்லது கோரவோ தமது வளங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்துச் சட்டத்திற்கு எதிரான குற்றத்தின் கீழ் பொதுச் சொத்தை தவறாகப் பயன்படுத்துதல் அல்லது தனிப்பட்ட முறையில் பயன்படுத்துதல் ஒரு குற்றவியல் குற்றமாக கருதப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 13 மணி நேரம் முன்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
