ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் நடைபெறும் எனதேர்தல்கள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு
மேலும், தேர்தல்களை நடத்துவதற்கு நிதி சம்பந்தமாக காணப்பட்ட பிரச்சினை தற்போது இல்லாமல் போயுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக 40 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு நேற்று அழைக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய, பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |