ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் - அரசாங்கம்
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த ஆவணம் ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது இந்த அறிக்கை தமிழ் மற்றும் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வருவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மொழி பெயர்ப்பு செய்யப்பட்டதன் பின்னர் இந்த அறிக்கைகள் அமைச்சரவை, நாடாளுமன்றம் என்பனவற்றிற்கு சமர்ப்பிக்கப்பட்டு அதன் பின்னர் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சிகள் விவாதம் ஒன்றை கோரினால் அதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டு விவாதம் நடாத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் இந்த அறிக்கை குறித்து ஆராயும் நோக்கில் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அறிக்கையை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 54 நிமிடங்கள் முன்

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
