தமிழர்கள் தொடர்பில் ரணிலின் இரகசிய நகர்வு : சாணக்கியனுக்கு சென்ற தொலைபேசி அழைப்புக்கள்(Video)
தமிழ் பொதுவேட்பாளர் கணிசமான தமிழ் வாக்குகளை பிரித்தால் பெரும்பான்மை இன சிங்கள வாக்காளர்களது வாக்குகள் மூன்றாக பிளவுபடும் நிலை ஏற்பட்டு அவர்களுக்காகவே போட்டியிடும் நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இந்த பின்னணியில் தான் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் பேசுபொருளாக்கி நாடிபிடித்து பார்க்கும் தந்திரத்தை ரணில் விக்ரமசிங்க அரங்கேற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ரணிலின் முயற்சி
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தை மிகவும் பேசும் பொருளாக மாற்றுவதற்கு தெற்கினுடைய அரசாங்கமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
தமிழ் வேட்பாளர் விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து அவதானித்து வருகின்றன. அது தொடர்பில் தொலைபேசி ஊடாக என்னிடம் பல அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
இதனை பார்க்கும் போது தெற்கிலே இருக்கும் பேரனிவாத சக்திகள் தமிழ் பொதுவேட்பாளர் விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதன் ஊடாக அதனை பிரபல்யப்படுத்துவதாக தெரிகிறது. இதற்கு பின்னணியில் உள்ள விடயங்களை நாம் பேசியாக வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தமிழர்களை பொறுத்தவரை ஒரு துரும்புச் சீட்டு.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுடைய வாக்குகள் இன்றி தனியே சிங்கள மாக்களது வாக்குகளினால் மட்டும் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படலாம் என்ற நிலை காணப்படும் போது தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி தமிழ் மக்களுடைய விடயங்களை முன்னிறுத்தி அதற்கு ஆணைகோரும் சர்வஜன வாக்கெடுப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அதனை நாங்கள் மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் மாலை திருவிழா



