25 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள மாற்றம் : ஜனாதிபதி வேட்பாளராக ரணில் அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிறுத்தப்படுவார் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் உள்ள தலைவர்களில், சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ள, சந்தேகமில்லாமல் தீர்மானங்களை எடுக்கும் அனுபவமுள்ள தலைவராக ரணில் விக்ரமசிங்க மாத்திரமே உள்ளார்.
ஜனாதிபதி எடுத்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 25 வருடங்களின் பின்னர் நாட்டின் தேசிய வருமானம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு கவலையளிக்கும் செய்தி : அரசாங்கத்தின் தீர்மானத்தால் பாரிய சிக்கலில் நகர்ப்புற மக்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |