புதிய கூட்டணி அமைத்தாலும் சஜித்தான் ஜனாதிபதி வேட்பாளர் : ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டம்
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸதான். புதிய கூட்டணி அமைத்தால்கூட இந்நிலைப்பாடு மாறாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மொட்டுக் கட்சியினரைத் தாக்கியே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார்
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கவே ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலைப்பாட்டிலேயே நாமும் உள்ளோம்.
கூட்டணி அமைப்பதில் நிதானம் தேவை. அரசமைப்பு ரீதியில் உள்ள சூழ்ச்சிகள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
மொட்டுக் கட்சியினரைத் தாக்கியே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார். இது மொட்டுக் கட்சிகாரர்களுக்குப் புரியவில்லை.
ஒரு கட்சியாலேயே மக்கள் போராட்டம் சீரழிக்கப்பட்டது. அந்தக் கட்சிக்கும் கடந்த காலத்தில் கறைபடிந்த வரலோறே உள்ளது.
அந்தக் கட்சியின் செயலால்தான் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார். அதேபோல் பதவிகளை இலக்காகக்கொண்டு புதிய கூட்டணி அமைப்பதற்கு நாம் எதிர்ப்பு என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
