பொதுவேட்பாளர் தொடர்பான முடிவு! ரணிலுக்கு வலுக்கும் ஆதரவு
உண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரணிலுக்கு ஆதரவு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியை பொதுவேட்பாளராக நியமித்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு கட்சியாக முடிவெடுத்தால் ஜனாதிபதிக்கு எனது ஆதரவை வழங்குவேன். எனவே அதனை நான் ஊடகவியலாளர்களிடம் கூறியிருந்தேன்.

தற்போது, பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பக் கூடிய தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதை முழு நாடுமே உணர்ந்துள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்னர் தோன்றிய நெருக்கடியான நிலையிலிருந்து குறுகிய காலத்துக்குள் நாட்டை ஜனாதிபதியினால் மீட்க முடிந்துள்ளது.
எனவே, ஜனாதிபதி பொதுவேட்பாளராக போட்டியிட்டால், நாம் அனைவரும் ஒரு நாடாக சிந்தித்து அவருக்கு ஆதரவை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நான் கடைப்பிடிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri