ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 21ஆம் திகதி அமெரிக்கா விஜயம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 21ஆம் திகதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆம் அமர்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இவ்வாறு அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முதல் தடவையாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் முதல் தடவையாக மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி வெளிநாட்டு விஜயமொன்றை செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியுயுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் ஆகியோர் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர்.