ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு..! அஸ்கிரிய பீடம் நம்பிக்கை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான சட்ட வழிமுறைகள் முன்னெடுக்கப்படும் என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க வெறகம தம்மநந்த தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சட்ட நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று, தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் மற்றும் மகா சங்கத்தினரின் கருத்துகள்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
எனினும், தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அது முழுமையடையாமல் போனதை அவர் நினைவுகூர்ந்தார்.

ஞானசார தேரரின் தற்போதைய நிலை குறித்து பல பிக்குகளுடன் கலந்துரையாடியதாகவும், பொதுமக்களின் மற்றும் மகா சங்கத்தினரின் கருத்துகள் கோரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
you may like this video