அவசரமாக நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதன் பின்னணி என்ன? ஜோதிடம் காரணமா?
இலங்கை நாடாளுமன்ற செயற்பாடுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார்.
தனக்குரிய விசேட அதிகாரத்தை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டதுடன், அதற்கான வர்த்தமானியையும் வெளியிட்டிருந்தார்.
எனினும் இந்த நடவடிக்கையின் பின்னணியில் ஜோதிடம் காரணமாக இருக்கலாம் என பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல்வாதிகள் பெரும்பாலும் ஜோதிடத்தை நம்புவதால், இதுபோன்ற நடைமுறைகள் ஜோதிடத்தின் அடிப்படையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் நம்புவதாக குறிப்பிடப்படுகின்றது. வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டு நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒத்தி வைக்கப்பட்டதன் உண்மையான நோக்கம், சம்பந்தப்பட்ட நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை அகற்றுவதே என அரசியல் விமர்சகர்களின் மற்றொரு கருத்தாக உள்ளது.
இம்முறை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரா குமார திஸாநாயக்க யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உடன்படிக்கையை வெளிப்படுத்திய சில நாட்களில், அதற்கு நிதி அமைச்சர் அல்லது அரசாங்க தரப்பினர் எவ்வித பதிலும் வழங்காமல் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு வெளியிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உட்பட அரச அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாக எதிர்ப்பு வெளியிட்டனர்.
40 உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிராக புதிய முன்னணி ஒன்றை உருவாக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 9 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
