24 மணி நேரத்துக்குள் ரணிலும்,கோட்டாபயவும் பதவி விலக வேண்டும்! மைத்திரி விதித்த காலக்கெடு
பிரதமரும்,ஜனாதிபதியும் மக்களின் கருத்துக்கு பணிந்து பதவி விலக வேண்டும் என்பது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தீர்மானம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
24 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும், பிரதமரும் இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அதன் பின்னர் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை அமைக்க அழைக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக மக்களை அடக்கியாளும் தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு தவறுகளை செய்து வருவதாகவும், அந்த தவறுகளை திருத்துமாறு முறையிட்ட போதிலும், தோல்வியடைந்ததன் விளைவாக நாடு நாளுக்கு நாள் அராஜகமாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட இலட்சக்கணக்கான பணம் |
அரசு உரிய முடிவுகளை விரைந்து எடுக்க வேண்டும்.
இறுதியில் நாட்டு மக்கள் வலிமிகுந்த அனுபவங்களை ஒரு போராட்டத்திற்கு கொண்டு வந்து இன்று நீதிக்காக போராடும் மக்கள் ஜனாதிபதி அலுவலகத்திலும், ஜனாதிபதி மாளிகையிலும் அமர்ந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என்பதே தமது ஒரே கோரிக்கை என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அனைத்துக் கட்சி அரசாங்கம் உடனடியாகச் செயற்படுவதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.