வாலுக்காராம எசல பெரஹெரவை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி
கொழும்பு கொள்ளுப்பிட்டி வாலுக்காராம விகாரையின் வருடாந்த மகா எசல பெரஹெர பாரம்பரிய சம்பிரதாய சடங்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று கலந்துக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விகாரையின் வருடாந்த எசல பெரஹெரவின் பாரம்பரிய சம்பிரதாய சடங்கில் கலந்துக்கொண்டதுடன் மியன்மாரில் இருந்து கொண்டு வரப்பட்ட பௌத்த தாதுவுக்கு ஜனாதிபதி மலர் பூஜை செய்துள்ளார்.
இதனையடுத்து 59 வது ஆண்டாக நடைபெற்ற வருடாந்த எசல பெரஹெரவை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்துள்ளார்.
கொள்ளுப்பிட்டி வாலுக்காராம விகாரை உட்பட பஞ்சமஹா விகாரைகளின் விகாராதிபதியும் ஊவான மாகாண பிரதான சங்க நாயக்கருமான மகரகமே நந்த தேரர், வாலுக்காராம விகாராதிபதி உடுவெல கோலித தேரர் ஆகியோர் சந்தனத்தில் செய்யப்பட்ட புத்தர் சிலை ஒன்றை ஜனாதிபதிக்கு அன்பளிப்பு செய்தனர் எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
