புலம்பெயர் தமிழர்களின் புத்திசாதுரியத்தை புரிந்து கொண்டாரா இலங்கை ஜனாதிபதி?

China President Mahinda Rajapaksa United Nation
By Dias Oct 09, 2021 05:38 PM GMT
Report

புலம் பெயர் தமிழர்களைப் புலிகள் என்றும், புலிகளின் நிழல்கள் என்றும் சிங்கள ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்தி வந்தார்கள். குறிப்பாக மகிந்த ராஜபக்ச தலைமையிலான கட்சியினர் இவ்விடயத்தில் கூர்மையாக இருந்தனர்.

ஆனால் நல்லாட்சிக் காலத்தில் புலம்பெயர் தமிழர்களை வெறுக்காமல் அவர்களுடனும் பேச வேண்டும் என்ற உண்மையை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் பிரதமர் மகிந்த தரப்பினர் அவர்களில் பலரையும், பல அமைப்புகளையும் தடை செய்வதில் அக்கறை காட்டினர் என கட்டுரையாளர் ஜி. ஸ்ரீநேசன் (முன்னாள் நா.உ , மட்டக்களப்பு) தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில்,

ஆனால் இவ்வாறு தடை செய்யப்பட்டவர்கள் புலம் பெயர் நாடுகளில் பயந்து பணிந்து கொண்டிருக்காமல் தமது புத்திசாதுரியமான நகர்த்தல்களை பல்வேறு நாடுகளிலும் மக்கள் எழுச்சியுடன் மேற்கொண்டு வந்தனர்.

இதனால் அவர்களது பலம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைப் பேரவை வரை ஊடுருவியது. இலங்கை ஆட்சியாளர்களுக்கு அவர்கள் வேண்டத்தகாதவர்களாகத் தீண்டத்தகாதவர்களாக இருந்தாலும் மேற்குலக ஜனநாயக நாடுகளில் புலம்பெயர் தமிழர்களின் ஜனநாயக வழியான செயற்பாடுகளுக்கு மதிப்பும், மரியாதையும் கணிசமான அளவு காணப்பட்டது.

இறுதி யுத்தத்தின் போது இனப்படுகொலை நடைபெற்றது என்பதை நோக்கிப் புலம்பெயர் தமிழர்களின் நகர்வுகள் படிப்படியாகப் பலம் சேர்க்கும் விதத்தில் அமைந்து கொண்டிருக்கின்றன. அதற்கான வழிமுறைகளை நோக்கி புத்திசாதுரியமாக அவர்கள் செயற்பட்டுக் கொண்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையைப் புலத்திலுள்ள உறவுகள் போராட்டங்கள் மூலமாக முன்னெடுக்கும் அதேவேளைப் புலம் பெயர் தமிழ் உறவுகள் அதற்கான சர்வதேச முன்னெடுப்புகளை மனிதவுரிமை மீறல் என்ற வகையிலும் இனப்படுகொலை என்ற வகையிலும் நகர்த்தல்களைச் செய்து வருகின்றனர்.

இந்த தாற்பரியத்தை தற்போது விடாக்கண்டர் கொடாக்கண்டர்களாக இருந்த இலங்கை ஆட்சியாளர்கள் உணரத் தலைப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் இடம் பெற்ற இனப்படுகொலைகளால் புலம்பெயர்ந்து பல நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்த தமிழ் மக்கள் மேற்குலக அரசியல்களின் பங்காளர்களாகவும் மாறியுள்ளனர்.

நோர்வே, கனடா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரதான அரசியல் கட்சிகளுடன் பலமான தொடர்புகளை ஏற்படுத்தி கெளரவமாக வாழுவதுடன் மட்டுமல்லாமல், புத்திசாதுரியமான அரசியலையும் செய்து வருகின்றனர்.

நோர்வே,கனடா போன்ற நாடுகளில் ஈழத்தமிழர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர்.அமெரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஈழத்தமிழர் உள்ளார். இவ்வாறாகச் சொந்த நாட்டில் இல்லாத உரிமை சுதந்திரம் சமத்துவத்தை மேற்குலக நாடுகள் தமிழர்க்கு வழங்கியுள்ளன.

எனவே மேற்குலகில் தமிழர்கள் பல்வேறு துறைகளில் தடம் பதித்து வருகின்றனர். தமிழ் புத்திஜீவிகளை இலங்கை அரசு ஒதுக்கியது ஓரங்கட்டியது. இன வன்முறைகளால் அவர்களை அழிக்கவும் வாய்ப்பளித்தது.

இதனால் இந்த நாட்டில் வாழ முடியாத தமிழர்கள் மேற்குலகில் இடம் பெயர்ந்து அந்த நாடுகளில் பக்கபலமாக இருந்து பல்வேறு துறைகளையும் வளர்ப்பதில் பங்களிப்புச் செய்கின்றனர்.

தமிழர்கள் என்பதற்காக அடிப்படைவாதத்தால் உதறித் தள்ளப்பட்டவர்கள் இன்று உலகநாடுகளில் ஈழத்தமிழர்களின் நீதி நியாயங்களைத் தேடும் சக்திகளாகவும் மூளை வளங்களாகவும் மாறியுள்ளனர்.

இனவாதத்தால் உதறப்பட்டவர்கள் தமது இனத்தைப் பாதுகாக்கும் சக்திகளாக மாறியுள்ளனர். நாட்டை வளர்க்க வேண்டிய மூளை வளங்களை எதிர் சக்திகளாக மாற்றிய சிங்கள ஆட்சியாளர்கள் 73 ஆண்டுகளுக்குப் பின்னராவது திருந்துவார்களா? இல்லை தொடர்ந்தும் பிற்போக்குவாதிகளாக இருக்கப்போகின்றார்களா? என்பதே எமது முனைப்பான பட்டறிவுக் கேள்வியாகும்.

பேரினவாதம் நாட்டை ஆக்கப்பாதையில் கொண்டு செல்லவில்லை அழிவுப்பாதைக்குக் கொண்டு சேர்த்துள்ளது என்பதே உண்மையாகும்.இதனைச் சிங்கள ஆட்சியாளர்கள் உணர்ந்துதான் ஆக வேண்டும்.

இல்லையென்றால் அது உணர்தப்பட்டேயாகும் என்பதே உலக நியதியாகும். யூக்கோஸ்லாவியா,சூடான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இந்த உண்மை உணர்த்தப்பட்டுள்ளது என்பது பட்டறிவுப்பகிர்வாகும்.

நாட்டை ஆக்கப்பாதையில் கொண்டு செல்ல வேண்டுமாயின் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு என்பது காலத்தின் கட்டாய தேவையாகும்.இதன் மூலமாகப் புலம் பெயர்ந்த புத்திஜீவிகளின் ஆற்றல் அர்ப்பணிப்பு நிபுணத்துவம் செல்வம் போன்றவற்றை நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தலாம்.

இல்லையென்றால் நாடு மேலும் குட்டிச்சுவராவதை எவராலும் தடுக்க முடியாது. அத்துடன் சீனா, அமெரிக்கா, இந்தியா, யப்பான் போன்ற நாடுகளின் போட்டிக்களமாகவும் இலங்கை மாறுவதைத் தவிர்க்க முடியாது. இதற்கு சீனாவால் கடலில் உருவாக்கப்பட்ட போட்சிற்ரி அம்பாந்தோட்டைத் துறைமுகம் முக்கியமான எடுத்துக்காட்டுகளாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US