மத்திய வங்கி ஆளுனரை பதவி விலகுமாறு கோரிய கோட்டாபய?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, வெகு விரைவில் அஜித் நிவாட் கப்ரால் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவிகளை வழங்குவதற்கான முதல் நிபந்தனையாக சர்வதேச நாணய நிதியம், மத்திய வங்கி ஆளுனரை பதிலீடு செய்யுமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதவியை ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி அஜித் நிவாட் கப்ராலுக்கு நேற்று காலை அறிவித்துள்ளார். எனினும் தம்மை பதவி விலக்குவது அரசியல் அமைப்பிற்கு புறம்பானது என பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கப்ரால் முறைப்பாடு செய்துள்ளார்.
அமைதியான முறையில் பதவியை ராஜினாமா செய்யுமாறு அஜித் நிவாட் கப்ராலுக்கு பிரதமரும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுனர் பதவி தற்பொழுது நிதி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வரும் எஸ்.ஆர். ஆட்டிகலவிற்கு வழங்கப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
