வடக்கு - கிழக்கில் சுமார் 1,550 பெரியவர்களும் 173 குழந்தைகளும் தொழுநோயால் பாதிப்பு: ரணில் சுட்டிக்காட்டு

Ranil Wickremesinghe Sri Lanka Eastern Province Northern Province of Sri Lanka
By Kajinthan Sep 02, 2024 03:10 PM GMT
Report

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் சுமார் 1,550 பெரியவர்களும் 173 குழந்தைகளும் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடுமையான நடவடிக்கை - உடன் கைது செய்ய உத்தரவு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடுமையான நடவடிக்கை - உடன் கைது செய்ய உத்தரவு

தொழுநோய் பாதிப்பு

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"ஒரு முக்கியமான பிரச்சினையான இந்த தொழுநோய்ப் பெரும்பாலும் குணப்படுத்த முடியுமாக இருப்பினும், இலங்கையின் சில பகுதிகளில் இன்றுவரை கவலைக்குரிய நிலைமை காணப்படுகிறது.

அனைத்து இலங்கையர்களின் ஆரோக்கியத்தையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு, இந்த சவாலை அவசரமாகவும் பசிவோடும் எதிர்கொள்ள எம்மைத் தூண்டுகிறது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் சுமார் 1,550 பெரியவர்களும் 173 குழந்தைகளும் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மைய அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. 

வடக்கு - கிழக்கில் சுமார் 1,550 பெரியவர்களும் 173 குழந்தைகளும் தொழுநோயால் பாதிப்பு: ரணில் சுட்டிக்காட்டு | President S Statement About Leprosy

இந்த எச்சரிக்கை ஏற்படுத்தும் புள்ளிவிவரம். ஒரு வலிமையான மற்றும் ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தின் தேவையை வலியுறுத்துகிறது.

தொழுநோய் மக்கள் சங்கம், தொழுநோய் எதிர்ப்புப் பிரச்சாரம் மற்றும் பல்வேறு சுகாதாரத் துறைகள் உள்ளிட்ட அர்ப்பணிப்புள்ள அமைப்புகளுடன் இணைந்து, இந்த தொழுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த ஒத்துழைப்பு முயற்சிகள் விழிப்புணர்வு அதிகரிப்பு, முன்கூட்டிய நோய் கண்டறிதல் மேம்பாடு, பாதிக்கப்பட்டோருக்கு உகந்த சிகிச்சையை உறுதி செய்யும் நோக்கத்தைக் கொண்டது.

தொழுநோயைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலமும், அதன் அறிகுறிகளைப் புரிந்துகொள்வதன் மூலமும், சமூக நலத் திட்டங்களில் பங்கேற்பதன் மூலமும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு ஒவ்வொரு குடிமகனையும் நான் அழைக்கிறேன்.

வடக்கு - கிழக்கில் சுமார் 1,550 பெரியவர்களும் 173 குழந்தைகளும் தொழுநோயால் பாதிப்பு: ரணில் சுட்டிக்காட்டு | President S Statement About Leprosy

பாதிக்கப்படுவோர், பயம் அல்லது பாகுபாடின்றி உதவியை நாடக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு, இந்நோய் பற்றிய தவறான புரிதல்களையும், களங்கத்தையும் அகற்றுவதை மிகவும் முக்கியமாகக் கருதுகிறோம்.

ஒன்றுபட்டு, தொழுநோயை அனுதாபத்துடனும் செயற்பாட்டுடனும் எதிர்கொள்வதற்கான நமது தீர்மானத்தை வலுப்படுத்துவோம்.

தனிநபர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கும் ஒரு நோய்க்கு எதிரான இந்த போராட்டத்தில் உங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டிற்கு படையெடுக்கும் இலங்கையர்கள்: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

வெளிநாட்டிற்கு படையெடுக்கும் இலங்கையர்கள்: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி தேர்தலில் நாமல் பெறவுள்ள மொத்த வாக்குகள்! வெளிவராத கணிப்பு

ஜனாதிபதி தேர்தலில் நாமல் பெறவுள்ள மொத்த வாக்குகள்! வெளிவராத கணிப்பு

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US