பதில் கணக்காய்வாளர் விடயத்தில் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதியின் பரிந்துரை
பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் சேவையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்குமாறு ஜனாதிபதி அரகுமார திசாநாயக்க விடுத்த பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.
ஐந்து உறுப்பினர்கள் இந்த முன்மொழிவை எதிர்த்த அதேவேளை, நான்கு பேர் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா மற்றும் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்களான அனுலா விஜேசுந்தர, பிரதாப் ராமானுஜம் மற்றும் தினேஷ் சமரரத்ன ஆகியோர் பரிந்துரையை எதிர்த்து வாக்களித்ததாக ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
பரிந்துரையை எதிர்த்து வாக்கு
இதன் காரணமாக, கணக்காய்வாளர் நாயகம் பதவி இன்னும் ஒரு வாரத்துக்குள் மீண்டும் வெற்றிடமாகவுள்ளது. இந்தநிலையில், பதில் கணக்காய்வாளர் நாயகம் நிலைக்கு புதிய ஒருவரை பரிந்துரைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கண்டியில் நடைபெற்ற தலதா பெரஹெராவைக் காண்பதற்காக அரச வங்கி ஒன்றிடம் இருந்து, பதில் கணக்காய்வாளர் நாயகம் ஆறு அனுமதிச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் மத்தியிலேயே, ஜனாதிபதியின் பரிந்துரையும், அரசியலமைப்பு பேரவைக்கு சென்றுள்ளது.
இந்தநிலையில், அரச வங்கிகள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன என்ற அடிப்படையில், எதிர்க்கட்சி மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள், ஜனாதிபதியின் பரிந்துரையை எதிர்த்து வாக்களித்தனர்.

இதேவேளை, பதில் கணக்காய்வாளர் நாயகம் கம்மன்பில எச்.டி. தர்மபால ஓய்வு பெற இன்னும் மூன்றரை ஆண்டுகள் உள்ளன. அதேநேரம், அரசியலமைப்பு பேரவையின் சிவில் சமூக உறுப்பினர்களின் பதவிக்காலமும் 2026 ஜனவரியில் முடிவடைய இருப்பதால் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri