கஞ்சா வளர்ப்பு தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனை! டயானா கமகே வரவேற்பு
இலங்கையில் கஞ்சாவை வளர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
“இந்த மருத்துவ மூலிகையின் மதிப்பை ஜனாதிபதி உணர்ந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பல வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய தொழில் இது. அதனால் தான் நான் அதை விளம்பரப்படுத்தினேன்.
பெறுமதியான முதலீடு
அடுத்த வருடம் கஞ்சா தோட்டம் மூலம் இரண்டு பில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான முதலீடுகளை கொண்டு வர நான் எதிர்பார்க்கிறேன்” என கமகே கூறியுள்ளார்.
தாமே இந்த முன்மொழிவை சில காலத்திற்கு முன் மேற்கொண்டதாக என்று அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
டயானா கமகே மீது சுமத்தப்பட்டுள்ள இரட்டைக் குடியுரிமைப் பிரச்சினையின்
காரணமாக, இந்த நாட்டிற்குக் கொண்டு வருவதாக உறுதியளித்த முதலீடுகளை
நிறைவேற்றும் போது, நாடாளுமன்றத்தில் நீடிக்க முடியுமா? என்ற கேள்விக்கு,
பதில் அளித்த அவர், இரட்டைக் குடியுரிமை பற்றி நான் இப்போது பேச
விரும்பவில்லை, ஏனெனில் விடயம் நீதித்துறையின் கைகளில் உள்ளது என்று
தெரிவித்துள்ளார்.