சுற்றுலா தளமாக மாறிய ஜனாதிபதி மாளிகை (Video)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நேற்று பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது வரை ஜனாதிபதி மாளிகை அவர்களுடைய கட்டுப்பாட்டின் கீழே இருந்து வருகின்றது.
பொதுமக்களின் கட்டுப்பாட்டில் வந்த ஜனாதிபதி மாளிகை அவர்களின் சுற்றுலாத்தளமாக தற்போது மாறியுள்ளது என்று கூட கூறலாம்.
ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அங்கிருக்கக்கூடிய நீச்சல் தடாகங்களில் நீராடுவது, இசை கச்சேரி, நடனம் என இளைஞர் யுவதிகள் கொண்டாட்டமாக ஜனாதிபதி மாளிகையில் இருக்கின்றனர்.
இவை தொடர்பான காணொலிகளும், புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
பொதுமக்களினால் தன்னெழுச்சியாக ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டத்தின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்துள்ளார், அதனைத் தொடர்ந்து சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்ததன் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



