குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 வருடங்கள் சிறைதண்டனை! ரணிலுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
பொதுச் சொத்துக்களை மோசடி செய்ததாக ஒருவருக்கு குற்றஞ்சாட்டப்பட்டு,குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதன் சட்டத்திட்டங்களின் பிரகாரமும் குற்றத்தின் தன்மையை பொருத்து 20 வருடங்கள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்த கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.த சில்வா தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியிருந்த தொலைபேசி உரையாடலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கப் பணம் மோசடி
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் தன்மையை பொறுத்து தீர்ப்பு தீர்மானிக்கப்படும்.
ஆனால் அரசாங்கப் பணம் மோசடி செய்யப்படவில்லை என்பதோடு அரச பணம் வீணாக்கப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்டால்,அப்பணத்தை மீள அறவிடக்க கூடிய குற்றவியல் சட்டம் 386-388 குறிப்பிடப்பட்டுள்ளப்படி இரு தரப்பும் சாதானத்திற்கு வர கூடிய நிலை காணப்படுகிறது.
பொதுச் சொத்துக்கள் மோசடி சட்டம்" என்று குறிப்பிட்ட சட்டம் இலங்கையில் நேரடியாக இல்லை.
மோசடி சட்டம்
எனினும், பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும், மோசடிகளைத் தடுப்பதற்கும், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துவதற்கும் பல சட்டங்களும், அரசினால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களும் உள்ளன.
அவற்றில் பொதுச் சொத்துக்கள் மோசடி செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணைகள் நடைபெற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இது இலங்கையின் சாதாரண சட்டத்தின் படியல்ல இது "பொதுச் சொத்துக்கள் மோசடி சட்டம்"விசேட சட்டத்தின் கீழ் நடைபெறுவதாகும்.
இதில் மஜிஸ்திரேட் அவர்களுக்கு விசேட காரணங்களை கருத்தில் கொண்டு பிணை வழங்க முடியும்.அது தொடர்பிலேயே மஜிஸ்திரேட் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.



