நாடாளுமன்ற பிரதானிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள முக்கிய பணிப்புரை
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, இவ்வருட நிகழ்வில் வணக்கம் செலுத்துதல் மற்றும் வாகன அணிவகுப்பு இடம்பெறாது எனவும்நாடாளுமன்ற பிரதானிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அரசியலமைப்பின் 33 (2) பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதற்கு முன்னதாக ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதியின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ருதியிடம் கேள்வி கேட்கப்போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri

பிடிப்பட்ட ரித்தீஷ்.. குத்தாட்டம் போட்ட செல்வி மகன்- காதல் தோல்விக்கு கம்பெனி கொடுத்த அம்மா Manithan
