ஜனாதிபதி ரணில் நாளை ஜேர்மன் பயணம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாளை (26.09.2023) இரவு பெர்லின் உலகளாவிய விவாதத்தில் பங்கேற்பதுடன் மாநாட்டில் உரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்! விசாரணையில் வெளியான தகவல்
பெர்லின் உலகளாவிய விவாதம்
அத்துடன் தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரச் சவால்களுக்கு உலகளாவிய தீர்வுகளைக் கண்டறிவதற்கான பெர்லின் உலகலாவிய விவாதம் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்க விஜயங்களை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் (23.09.2023) இலங்கை வந்தடைந்திருந்தார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதலாவது மீளாய்வுக்கான இறுதிக் கலந்துரையாடலும் இன்று ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |