திருகோணமலைக்கு ஜனாதிபதி ரணில் திடீர் விஜயம் (Video)
ஜனாதிபதி திடீர் விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திருகோணமலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த உத்தியோகபூர்வ விஜயம் இன்றைய தினம் (14.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதி திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கலந்துரையாடலின் போது ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், ஊடகவியலாளர்கள் காணி மற்றும் வீட்டு வசதிகள் அற்று வாழ்வதாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி
இந்த நிலையில் சகல விடயங்களையும் கேட்டறிந்த ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பாக குழுவொன்றை நியமித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்த நாட்டில் இனிமேல் இன, மத வன்முறைக்கு இடமில்லை. அனைவரும் சுதந்திரமாக நடமாடும் நிலைமை தொடர்ந்து நீடிக்கும். அனைத்துத் தரப்பினரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதனைதொடர்ந்து திருகோணமலை கடற்கரையையும் ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.

