அமைச்சுக்களின் பொறுப்பற்ற செயலால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு - ஜனாதிபதி சாடல்
நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து அடைந்தமைக்கு அனைத்து அமைச்சுக்களும் பொறுப்பு கூற வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாணங்களின் பிரதம செயலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டுக்கு என்ன நேர்ந்துள்ளது
சில திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி வழங்க காலம் தாழ்த்தப்பட்டது எனவும் இதனால் மக்களின் பணம் விரயமாக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு என்ன நேர்ந்துள்ளது என இளைஞர்கள் கேள்வி எழுப்புவது நியாயமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் எண்ணிக்கையை தொடர்ந்தும் 30 ஆக பேணுவதே பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சுக்களை ஒன்றிணைப்பது
உள்ளுராட்சி மற்றும் அரச நிர்வாக அமைச்சு ஒரே அமைச்சின் கீழ் இயங்குகின்றது. அமைச்சுக்களை ஒன்றிணைப்பது நல்ல விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமானது. இந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துவதனை தவிர்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |