ஜனாதிபதி பதவி விலகல்: பிரதமர் பதவி தொடர்பில் அரசியல் அமைப்பின் தகவல் - சட்டத்தை கூறும் வஜிர
ஜனாதிபதி பதவி விலகுவதால் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்றுஅரசியல் அமைப்பில் கூறப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் சட்டத்தின் தேவை இருப்பதாகவும் அனைத்து நடவடிக்கைகளும் அரசியல் அமைப்புக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
ஜனாதிபதி பதவி விலகல்

ஜனாதிபதி பதவி விலகல் செய்தமையால், பிரதமர் உடனடியாக பதவி விலக முடியாது என தெரிவித்த அவர், அரசியல் அமைப்பில் அவ்வாறான எந்த சரத்துக்களும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தை மீறுவது சாத்தியமற்றது.
முன்னதாக, தாம் பதவி விலக தயாராக இருப்பதாக தெரிவித்த கருத்தை ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக அபேவர்த்தன குறிப்பிட்டிருக்கிறார்.
அரசியல் அமைப்பு

அரசியல் அமைப்பின் 37 ஆவது சரத்து ஒரு நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாத போது ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்காக எழுதப்பட்டதாகவும் அது முப்பத்து ஏழு-ஒன்று மற்றும் முப்பத்து ஏழு-இரண்டு ஆகிய சரத்துக்களால் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் குறிப்பிட்டிருக்கிறார்.
அத்தகைய விதிகளை பாக்கிஸ்தானும், ரஷ்யாவும் பயன்படுத்துகிறது. எனவே இலங்கையிலும் அது பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் குறிப்பிட்டிருக்கிறார்.
பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார் News Lankasri
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri