முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரி எடுத்த விபரீத முடிவு! அறையில் சிக்கியுள்ள முக்கிய ஆவணம்
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் அதிகாரியொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெயாங்கொடை - பட்டலகெதரவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெயாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதான சமிந்த ராஜகருணா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விசாரணை தீவிரம்
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவரது கையெழுத்தில் எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிறிய ஆவணம் ஒன்றும் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த பொலிஸ் அதிகாரி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
பாண்டியன் குடும்பம் மீது பொய் புகார் அளித்த மயில் அம்மாவுக்கு நேர்ந்த கதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் போட்டோ Cineulagam