போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்! யாழில் பதற்றம் (Video)
யாழில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் மீதே இவ்வாறு நீர்த்தாரை பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதி வழிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டம் இன்று (15.01.2023) யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினாலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு வாழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியக் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (13.01.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்த அமைதி வழிப் போராட்டத்துக்கான அழைப்பை மாணவர் ஒன்றியம் விடுத்திருந்தது.
இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan
