பாதுகாப்பு தரப்பினருக்கு எதிரான வழக்குகளை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு
பாதாள உலகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரிகளை கைது செய்யுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகளை நீக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு பிரிவுகளின் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தேசிய பாதுகாப்பு சபை கூடியபோது, நாட்டில் அதிகரித்து வரும் பாதாள உலகத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நடைமுறை சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
இதன்போதே ஜனாதிபதியிடம் பாதுகாப்பு தரப்பினர், தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். இதன்படி, மீண்டும் தீவிரமாகிவரும் பாதாள உலகத்தை கட்டுப்படுத்தும் விடயத்தில் ஜனாதிபதியை உடனடியாக தலையிடுமாறு பாதுகாப்பு பிரதானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி பாதாள உலகத்தை ஒடுக்குவதற்காக நியமிக்கப்பட்ட விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு எதிராக ஏற்கனவே 17 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி வருண ஜயசுந்தர இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.
நீதிமன்ற வழக்குகள் தாமதமாகி வருவதால் சில அதிகாரிகள் பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கையில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
