இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதியின் முக்கிய உத்தரவு
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய உத்தரவொன்றை வழங்கியுள்ளார்.
அதன்படி நெல் கையிருப்பை பிணையாக வைத்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு - 2, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைமை அலுவலகத்தை நேற்றைய தினம் பார்வையிட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், போட்டித் தன்மையுடன் நெல்லைக் கொள்வனவு செய்து, அரசாங்கத்திடம் போதியளவு நெல் கையிருப்பைப் பேணுவதை இலக்காக கொண்டு, இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri