புத்தாண்டில் ஜனாதிபதி தலைமையில் விசேட வேலைத்திட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின்படி, எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசாங்க சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் தங்கியுள்ள சுமார் பத்தாயிரம் சிறுவர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கும் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து புத்தாண்டு பரிசுகள்"என்ற தொனிப்பொருளின் கீழ் ரணில் விக்ரமசிங்க நுவரெலியாவில் உள்ள சிறுவர் இல்ல, சிறுவர்களுக்கு புத்தாண்டுக்கான பரிசுகளை கடந்த காலம் முதல் வழங்கி வருகின்றார்.
வேலைத்திட்டம்
இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் நாட்டில் உள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் உள்ள சிறுவர்களுக்கு இது போன்ற பரிசுகளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியை வழங்கும் நோக்கில் புத்தாண்டில் ஜனாதிபதி இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.