மாலைதீவின் ஜனாதிபதிக்கு மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) பதவியேற்பு நிகழ்வுக்கு மாலைதீவின் ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இலங்கை, பூட்டான், நேபாளம், மொரீசியஸ் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் இந்த பதவி பிரமாண நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இராஜதந்திர முறுகல்
இந்தநிலையில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தெரிவானமைக்கு மாலைதீவின் ஜனாதிபதி மொஹமட் முய்ஸு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையிலேயே அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சீன சார்பு கொள்கையை கொண்டுள்ள மாலைதீவின் ஜனாதிபதி, இந்தியாவுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வருகின்றமை காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு மத்தியில் மாலைதீவின் ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையானது புதிய உறவுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |