கிளிநொச்சியில் விதை தென்னை தோட்டத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதைத் தென்னைத் தோட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆரம்பித்து வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வு, இன்றையதினம்(02.09.2025) செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன இணைந்து இதனை நிறுவியுள்ளன.
தென்னை தினக் கொண்டாட்டங்கள்
சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், துறைசார் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராசா, க.இளங்குமரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் - தேவந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
