ஜனாதிபதி ராஜபக்சவினரின் பணய கைதி-எதிர்க்கட்சித் தலைவர்
நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ச குடும்பம் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பணய கைதி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பிரதான அலுவலகத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்கள் போராட்டத்தின் நோக்கம்

மக்களுக்கு கஷ்டங்களை ஏற்படுத்திய அரசாங்கத்தை விரட்டி விட்டு, ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது பொது மக்கள் போராட்டத்தின் நோக்கம்.
எனினும் இறுதியில் நாட்டின் பொருளாதார கொலைக்கு காரணமாகவர்களுக்கு பந்தலாகவும் அவர்களை பாதுகாக்கக் கூடிய நபர் ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்தார்.
ராஜபக்சவினர் பொருளாதார கொலையாளிகள்

நாட்டின் பொருளாதாரத்தை கொலை செய்த ராஜபக்சவினர் அமைச்சு பதவிகளை பெறவில்லை என்றாலும் அவர்களுக்கு ஆதரவான தரப்பினர் அமைச்சு பதவியை பெற்று ராஜபக்சவினருக்கு தேவையான வகையில் நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர்.
மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல. தேர்தல் ஒன்றில் அந்த மாற்றம் நடக்க வேண்டும். அதற்கு அனைவரும் தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.