ஐ.மக்கள் சக்தியை பிளவுப்படுத்தும் சதித்திட்டம்:மலேசியாவில் இருந்து முன்னெடுக்கப்படுகிறது என்கிறார் சஜித் பிரேமதாச
ஐக்கிய மக்கள் சக்தியை இரண்டாக பிளவுப்படுத்த மலேசியா மற்றும் கண்டியில் இருந்து சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எவரையும் தக்கவைக்க பணத்தை செலவிட போவதில்லை
எனினும் கட்சியில் இணைத்துக்கொள்வதாகவும் கட்சியில் எவரையும் தக்க வைப்பதற்காகவும் பணத்தை செலவிடப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த பலர் அரசாங்கத்தில் இணைய போவதாக ஊடகங்கள் வாயிலாக பெரிய பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அப்படி எதுவும் நடக்காது.
ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுப்படுத்த முயற்சிக்க வேண்டாம்
அமைச்சு பதவிகளை வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுப்படுத்த முயற்சிக்க வேண்டாம். பணத்திற்கும் சிறப்புரிமைகளுக்கும் விற்பனையாகும் நபர்கள் எமது கட்சியில் இல்லை.
ஐக்கிய மக்கள் சக்தி பிளவுப்படுத்தும் சதித்திட்டத்தில் சிக்க போவதில்லை எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
