தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி ஹிட்லராக மாறுவார்! - திலும் அமுனுகம தெரிவிப்பு
“தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஹிட்லராக மாறுவார் என இவ்வாறு போக்குவரத்துத்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, "ஜனாதிபதி ஏகாதிபத்திய ஆட்சியை முன்னெடுப்பார் என்று வாக்களித்த 69 இலட்சம் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் அவ்வாறு நடந்துகொள்ளாததால் அரசு மீது மக்கள் குறை கூறுகின்றார்கள்.
பௌத்த தேரர்களும் ஜனாதிபதி, ஹிட்லர் போன்று செயற்பட வேண்டும் எனக் கோருகின்றார்கள். ஆனால், ஜனாதிபதிக்கு ஒரே தடவையில் ஹிட்லர் ஆக மாறவேண்டி இருப்பதாக நான் நினைக்கவில்லை.
எனினும், சில பிரிவினரின் செயற்பாடுகளை அடுத்து அவர் ஹிட்லராக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு ஜனாதிபதி ஹிட்லர் ஆனதன் பின்பு அரசு மீது பழி சுமத்தப்படுவதும் நின்றுவிடும். அத்தோடு அனைத்து செயற்பாடுகளும் சரியாக முன்னெடுக்கப்படும்" - என்றார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
