ஹம்பாந்தோட்டை மாவட்டம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கவலை
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அபிவிருத்தி நிதிகள் மோசமாகப் பயன்படுத்தப்படுவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கவலை தெரிவித்துள்ளார்.
இன்று(11) நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த ஜனாதிபதி, ஒதுக்கப்பட்ட ரூ. 574 மில்லியனில் ரூ. 23 மில்லியன் மட்டுமே இந்த ஆண்டு இதுவரை செலவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அபிவிருத்தியை விரைவுபடுத்துமாறும், ஆண்டு இறுதிக்குள் நிதியை முறையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
பாதீட்டு ஒதுக்கீடுகள்
தேசிய அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு அரசியல் தலைவர்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் அவசியத்தை அவர் எடுத்துரைத்துள்ளார்.
அத்துடன், 2025 பாதீட்டு ஒதுக்கீடுகள் மற்றும் திட்ட முன்னேற்றத்தையும் ஜனாதிபதி மதிப்பாய்வு செய்ததுடன் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் பயனுள்ள நில பயன்பாட்டுக் கொள்கைகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
