ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அச்சம் வெளியிட்டுள்ள பொன்சேகா
இவ்வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு எதிராக பல சக்திகள் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா(Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள்
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்தவேண்டும் என்ற விடயத்தில் சில சக்திகள் உறுதியாகவுள்ளமை புலனாகியுள்ளது.

இத்தகைய செயற்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன என்பதுடன் கடும் கரிசனத்திற்குரியவையாக காணப்படுகின்றன.
இலங்கையின் அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சட்டங்களின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri