மக்களை பாதிக்கும் தேர்தல் முறை மாற்றங்களை ஏற்க மாட்டோம் : மனோ கணேசன்
எமது மக்களை பாதிக்கும் எந்தவொரு அடாத்தான, தன்னிச்சையான தேர்தல் முறை மாற்றங்களையும் நாம் ஏற்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்(Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,
தற்போதைய விகிதாசார தேர்தல் முறையை மாற்றும் சீர்திருத்தம் தேவையற்றது என்ற நிலைபாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி அன்று முதல் எப்போதும் கொண்டுள்ளது. இதுவே எமது நிலைப்பாடாக நாடாளுமன்ற தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவிலும் தொடர்ச்சியாக இருந்துள்ளது.
வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை! சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவித்த மைத்திரி
பிரதான நிபந்தனை
அன்றைய அமைச்சர், இன்றைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன(Dinesh Gunawardena), தலைமையில் கடைசியாக இடம்பெற்ற தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவில், தேர்தல் முறை சீர்திருத்தம் தொடர்பில் ஏகமனதாக தீர்மானம் ஏற்பட்டது போன்ற தோற்றப்பட்டை அரசாங்கம் காட்ட முயல்கிறது. இது பச்சை பொய்.

பதினாறு உறுப்பினர்களில் சரிபாதி எட்டு எதிர் கட்சி உறுப்பினர்கள் தெரிவுக்குழு அறிக்கையை நிராகரித்து, அறிக்கையில் கையெழுத்திட மறுத்து விட்டோம். அங்கே ஏற்பட்ட ஒரேயோரு ஏகமனதான தீர்மானம், சட்டத்தை திருத்தி, விகிதாசார முறையில் மாகாணசபைகள் தேர்தல்களை நடத்துவது என்பதாகும். அதையும்கூட அரசாங்கம் செய்யவில்லை.
இந்நிலையில் திடீரென அமைச்சரவையில் தேர்தல் முறை சீர்திருத்தம் வேண்டும் என்று ஒரு நாள், பிறகு இப்போது வேண்டாம் என்று இன்னொரு நாள் தீர்மானிப்பது கேலிக்கூத்து ஆகும். இந்நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதியை நான் சந்தித்த போது இது தொடர்பில் தற்போது முன்னெடுப்புகள் இல்லை என்றார்.
அதேபோல், சில தினங்களுக்கு முன் நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை(Wijeyadasa Rajapakshe) சந்தித்த போது அவரும் இதையே எனக்கு தெரிவித்தார். ஆகவே இந்த பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வருகிறது.
இந்நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சுமார் 60 விகிதமானோர் பல மாவட்டங்களில் சிதறி வாழ்கிறார்கள்.
எனவே, எமது மக்களை பாதிக்கும் எந்தவொரு அடாத்தான, தன்னிச்சையான தேர்தல் முறை மாற்றங்களையும் நாம் ஏற்க மாட்டோம். விகிதாசார முறையை மாற்றாமல் உள்ளக மாற்றங்களை பற்றி வேண்டுமானால் நாம் பேசலாம். இது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தொன்று தொட்டு வரும் நிலைப்பாடு ஆகும்.
எதிர்வரும் தேர்தல்களில் பெரும்பான்மை கட்சிகளுடன் உடன்பாடுகள் காணும் போது இதுவும் எமது பிரதான நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam