ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடவுள்ள பிரதான அரசியல் கட்சிகள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களின் பெயர்களை விரைவில் வெளியிடவுள்ளன.
இதேவேளை, பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவின் பெயர் பரிந்துரைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது குறித்து அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது பொதுஜன பெரமுனவின் நோக்கமும் இலக்கும் ஆகும்.
நாமல் ராஜபக்ச
அதற்காக, நாடாளுமன்றத்தை விரைவாக கலைத்து தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பசில் ராஜபக்ச உட்பட அந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் அழுத்தத்தை பிரயோகித்து வருகின்றனர்.
மேலும், பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் பிரதம வேட்பாளராக நாமல் ராஜபக்ச நிறுத்தப்பட வேண்டுமென கோரிக்கைகளும் பசிலிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.
பொதுத் தேர்தல்
இந்நிலையில், விரைவில் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்கள் ஒன்றுகூடி பொதுத் தேர்தலை முதலில் நடத்தும் தீர்மானத்தை எடுக்க உள்ளனர்.
இதேவேளை, இந்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றவும் அவர்கள் உத்தேசித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |