ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பில் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்
ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி மாலை 04.15 மணியளவில் ஆரம்பமாகும். எண்ணி முடிக்கப்பட்ட பின்னர் உரிய முடிவுகள் ஊடகங்களுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் வாக்குகளை எண்ணும் பணிகள் இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ முடிவுகள்
உத்தியோகபூர்வ முடிவுகள் கிடைக்கும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் ஊடகங்களிடம் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.