திருடர்களின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்:ஐ.மக்கள் சக்தி

R M Ranjith Madduma Bandara Ranil Wickremesinghe Samagi Jana Balawegaya Sri Lankan political crisis Sri Lanka Anti-Govt Protest
By Steephen Jul 21, 2022 11:04 AM GMT
Report

நாட்டு மக்கள் போராட்டங்களை நடத்தி, பேரணிகளில் சென்று அதிகாரத்தில் இருக்கும் திருடர்களை வீட்டுக்கு அனுப்ப முயற்சித்தனர் எனவும் எனினும் அந்த திருடர்கள் இணைந்து தமது பாதுகாப்புக்காக ஜனாதிபதி ஒருவரை நாடாளுமன்றத்தின் ஊடாக தெரிவு செய்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித்தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நாட்டுக்கான புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். முதலில் அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாட்டை மீட்டெடுக்க அவருக்கு பலம் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

நாடாளுமன்றத்தில் மக்களின் நிலைப்பாடுகள் பிரதிபலிக்கவில்லை

திருடர்களின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்:ஐ.மக்கள் சக்தி | President Elected For The Protection Of Thieves

அத்துடன் நாடாளுமன்றத்தில் நேற்று நாட்டின் மக்களின் நிலைப்பாடுகள் பிரதிபலித்ததா என்று கேட்க விரும்புகிறேன். 2020 ஆம் ஆண்டு தேர்தலின் போது இருந்த சூழ்நிலைமைக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டவர்களே தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர்.

அன்று மக்களுக்கு இருந்த நிலைப்பாட்டுக்கு அமைய போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள். மக்களின் அந்த நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால், நாடாளுமன்றத்தில் மக்களின் தற்போதைய நிலைப்பாடுகள் பிரதிபலிக்கவில்லை.

திருடர்களை விரட்டவே மக்கள் போராட்டங்களை நடத்தினர்

திருடர்களின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்:ஐ.மக்கள் சக்தி | President Elected For The Protection Of Thieves

 நாட்டு மக்கள் அன்று தமது நிலைப்பாடுகளுக்கு அமைய தெரிவான ஜனாதிபதியை நாட்டில் இருந்து விரட்டியுள்ளனர்.

அந்த ஜனாதிபதியுடன் தெரிவானவர்களே நாடாளுமன்றத்தில் அதிகளவில் இருக்கின்றனர். திருடர்களை விரட்டவே மக்கள் போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்தினர்.

ஆனால், திருடர்கள் இணைந்து ஒருவரை தெரிவு செய்துள்ளனர். நாட்டு மக்கள் தூய்மையான அரசியலை எதிர்பார்த்தனர்.

சஜித் மற்றும் டளஸ் ஆகியோரின் கறைப்படியாத கரங்கள்

திருடர்களின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்:ஐ.மக்கள் சக்தி | President Elected For The Protection Of Thieves

இதன் காரணமாகவே கறைப்படியாக கரங்களை கொண்டுள்ள சஜித் பிரேமதாசவும் டளஸ் அழகப்பெருமவும் இணைந்து ஒரு பயணத்தை செல்ல தயாராகினர்.

எமது கட்சி இதற்காக ஐந்து சதத்தை கூட செலவிடவில்லை. மக்களின் நிலைப்பாட்டுக்கு அமைய செயற்படும் ஜனாதிபதியே எமக்கு வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தமைக்கான காரணம் என்ன?.

நாட்டை அதளபாதாளத்தில் இருந்து மீட்டெடுப்பதா?. நாட்டில் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கவா?. இல்லை, எரிந்து போன தமது சொத்துக்களை நிர்மாணித்து கொள்ளவே வாக்களித்துள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

நாங்கள் அதனை எதிர்க்கவில்லை. தமது பாதுகாப்பு, தமது வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வது மற்றும் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US