பசிலிடம் இருந்து ஜனாதிபதிக்கு சென்ற செய்தி! கோட்டாபயவை தொடர்புகொண்ட ரணில்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கை திரும்பி வருவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவரை தொடர்புக்கொண்டுள்ளார்.
பசில் விடுத்த கோரிக்கை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் போது,விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி, கோட்டாபய ராஜபக்சவை தொடர்புக்கொண்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்காக வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு பசில் ராஜபக்ச, ஜனாதிபதியிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பும் திகதி இன்னும் உறுதியாகவில்லை
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகிய போதிலும் அவர் அதனை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இதனால், கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பும் தினம் இன்னும் உறுதியாகவில்லை.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
