ஜனாதிபதிகள் மாறினாலும் நிலைமைகளில் மாற்றமில்லை-மனித உரிமை கண்காணிப்பகம்

Human Rights Commission Of Sri Lanka Human Rights Council Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Human Right Day
By Steephen Jan 12, 2023 06:20 AM GMT
Report

இலங்கையில் 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதிகள் மாறிய போதிலும் அது நாட்டின் மனித உரிமை நிலைமைகளில் எந்த முன்னேற்றத்திற்கு காரணமாக அமையவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகளை மீளாய்வு செய்யும் தனது 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கை ஊடாக மனித உரிமை கண்காணிப்பகம் இதனை இன்று தெரிவித்துள்ளது.

பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எதிர்நோக்கி வரும் கோட்டாபய 

கோட்டாபய ராஜபக்ச

இலங்கையில் கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடினர். பல ஆண்டு தவறான நிர்வாகம் காரணமாக குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காமை, ஊழல், சட்டத்தின் ஆட்சியை ஒடுக்கியதன் பின்னர் உருவான கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராடினர்.

பாரதூரமான மனித உரிமை மீறல் தொடர்பில் நீண்டகாலமாக குற்றச்சாட்டை எதிர்நோக்கி வரும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த ஜூலை மாதம் பதவியில் இருந்து விலகினார்.

கோரிக்கைகளுக்கு அடக்குமுறை மூலம் பதிலளித்துள்ள ரணில் விக்ரமசிங்க

ரணில் விக்ரமசிங்க

அதன் பின்னர் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, பெரும்பாலும் அமைதியாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தை அடக்கினார். அதன் செயற்பாட்டாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த காலத்தில் சட்டங்கள் மீறப்பட்டமை சம்பந்தமாக நீதியை வேண்டி விடுக்கப்பட்ட கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடக்குமுறை மூலம் பதிலளித்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உதவும் சர்வதேச பங்காளிகளிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 

ஜனாதிபதிகள் மாறினாலும் நிலைமைகளில் மாற்றமில்லை-மனித உரிமை கண்காணிப்பகம் | President Change Human Rights Condition Unchanged

இலங்கை தனது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண உதவும் வெளிநாட்டு பங்காளிகள், இலங்கை மக்களின் அடிப்படை மனித உரிமைகளின் மறுசீரமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிப்பது குறித்து கவனம் செலுத்துவது தொடர்பில் இலங்கையை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

712 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் மனித உரிமை கண்காணிப்பகம் சுமார் 100 நாடுகளின் மனித உரிமை நிலைமைகளை மீளாய்வு செய்துள்ளது.

ஜனாதிபதிகள் மாறினாலும் நிலைமைகளில் மாற்றமில்லை-மனித உரிமை கண்காணிப்பகம் | President Change Human Rights Condition Unchanged

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம், மாணவர் செயற்பட்டாளர்களை தன்னிச்சையான முறையில் தடுத்து வைக்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தியதையும் எதிர்ப்பை அடக்கிய விதமும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல ஆண்டுகளாக கொடுக்கப்பட்ட அழுத்தங்களின் பின்னர் மார்ச் மாதம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் மேலோட்டமான திருத்தங்கள் செய்யப்பட்டாலும் அந்த சட்டத்தை இரத்துச் செய்வதை இலங்கை அரசு மீண்டும், மீண்டும் தவிர்த்து வருவதாகவும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US