தேர்தலில் வெற்றி பெற சூழ்ச்சிகளைக் கையாளும் ஜனாதிபதி: கோவிந்தன் கருணாகரம் குற்றச்சாட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சூழ்ச்சியை மேற்கொண்டு வருகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று (28.01.2024) அனுஸ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பணத்தைப் பெற்று நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்கின்ற ரீதியில் ஜனாதிபதி செயற்படுகின்றார். அதே நேரத்தில் இன்று ஒட்டுமொத்த மக்களது குரலை நசுக்குவதற்காகவும் ஊடகங்களை அடக்குவதற்காகவும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை கொண்டு வருகின்றார்.
இந்நிலையில், மறுபக்கம் அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னுடைய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறுகின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவி்க்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
