அரசியல் கட்சிகளுக்குள் பிளவு! மகிந்த அமரவீரவின் தகவல்
ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள பெயர்களில் இருந்து ஒருவர் இன்று விலகுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவித்த அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியை சேர்ந்தவருமான மகிந்த அமரவீர, எவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் மனசாட்சியின் படி எம்.பிக்கள் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதிப் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகளுக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இது துரதிஷ்டவசமானது.
ஜனாதிபதிப் பதவிக்கு முன்மொழிப்பட்ட மூவரும் கலந்துரையாடி போட்டியில்லாது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைத் தெரிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,