மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து
ஜனாதிபதி தேர்தலுக்கு எமது மொட்டு கட்சியிலிருந்து தகுதியான ஒருவரின் பெயர் குறிப்பிடப்படும். அது குறித்து தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில், ஜனாதிபதியாக வேட்பாளராக ஒருவரை தெரிவு செய்தற்கு முன், அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் எவ்வாறான வேலைத் திட்டங்களை செய்திருக்கின்றார் என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தற்போதைய நிலை
நாடு தற்போது ஓரளவுக்கு முன்னேற்றமடைந்து வருகின்றது. ஜனாதிபதி என்ற பதவிக்கு முழு அனுபவம் கொண்ட ஒருவரே தேவை. தற்போதைய நிலை குறித்தும், எதிர்கால நாட்டின் நிலை பற்றியும் சந்தித்துச் செயற்பட வேண்டும்.
மக்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும் வகையில், தாம் முடிவொன்றை எடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் போட்டியிட அனைவருக்கும் ஆசை உள்ளது எனினும், ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்படும் நபரொருவர், எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார்? பொறுப்புக்களை பொறுப்பேற்றுள்ளாரா? அவற்றை சரியாக நிறைவேற்றியிருக்கிறாரா? அவருக்கு முன் அனுபவம் இருக்கிறதா? என்பது குறித்து ஆராய்ந்தே தீர்மானிக்க வேண்டும் என சமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri