மனித உரிமை ஆர்வலர்கள் மீது ஜனாதிபதி கடும் குற்றச்சாட்டு
இலங்கையில் மனித உரிமை பாதுகாவலர்கள் என அழைக்கப்படுவோர் வெளிநாட்டு பணத்தில் தங்கி வாழ்பவர்கள் என ஜனாதிபதி பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
"நம்மிடம் இருக்கும் சில டிபெண்டர்கள் டீசலில் ஓடுகின்றன. இந்த டிபெண்டர்களும் டீசலில் ஓடுகிறார்கள். அவர்கள் தம்மை மனித உரிமை டிபெண்டர்கள் எனக் கூறிக்கொண்டு வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கி வாழ்கிறார்கள்.
இது உண்மை தானே.” Human Rights Defenders (HRD) எனப்படும் இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கவனம் செலுத்தியுள்ளது.
மனித உரிமைகளுக்குள் அராஜகம், வன்முறை
மனித உரிமைகளுக்குள் அராஜகமும் வன்முறையும் நுழைவதில்லை எனவும் அது மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது எனவும் கூறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மனித உரிமைகளைப் பயன்படுத்தி அராஜகத்தையும் வன்முறையையும் உருவாக்க முடியாது என நவம்பர் 24 வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மனித உரிமைகள் என்ற பெயரில் வன்முறை செய்தவர்களை பாதுகாக்க முடியாது. இலங்கையின் மனித உரிமை பாதுகாவலர்களை தாம் பாதுகாத்ததாக தம்பட்டம் அடித்த ஜனாதிபதி, அவர்களே தற்போது தமக்கு எதிராக கூச்சலிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"எனக்கு இவர்களை தெரியும். இவர்களுடன் நான் பணியாற்றியுள்ளேன். நான் அவர்களை பாதுகாத்தேன். இப்போது அவர்கள் என்னை நோக்கி கத்துகிறார்கள்.
மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிராக ஜனாதிபதி வாய்மொழித் தாக்குதலை
ஆரம்பித்த அன்றே முல்லைத்தீவு ஊடக மையத்திற்குள் நுழைந்த இலங்கை இராணுவத்தின்
591ஆவது படைப் பிரிவின் உறுப்பினர்கள் அங்கிருந்த செயற்பாட்டாளர்களின்
விபரங்களை கேட்டறிந்தனர்.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri

தனக்கு செம ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் பேச்சு வார்த்தையில் நடிகர் அஜித்- யாருடன் தெரியுமா? Cineulagam

வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் ஒரு விசா... சில பயனுள்ள தகவல்கள் News Lankasri

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam
