பாதுகாப்பு சபையில் கலந்துரையாடி பதிலளிக்கின்றேன்: பொலிஸ் பதிவு தொடர்பில் மனோவுக்கு ஜனாதிபதி உறுதி
நாட்டில் முன்னெடுக்கப்படும் பொலிஸாரின் பதிவு நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு சபையில் கலந்துரையாடி பதிலளிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
குறித்த விடயத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஆட்சி மொழி சட்டம்
"இது தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு அறியப்படும்வரை, அரசியல் யாப்பில் இருக்கின்ற, ஆட்சி மொழி சட்டத்தை மீறுகின்ற இந்த பொலிஸ் பதிவு படிவங்களை நிராகரிக்கும்படி மக்களை கோருகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
Following a discussion, the President @RW_UNP has promised me that he will discuss the subject of police registering households at the security council meeting next Tuesday. Until then, I call upon the people to disregard the process that violates the #Language_rights enshrined… pic.twitter.com/Rlb8HINFHl
— Mano Ganesan (@ManoGanesan) December 16, 2023
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |