மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்! நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கூறப் போகும் முக்கிய செய்தி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விரைவில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திறைசேரியில் இருந்து அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய கடன் தொகைக்கான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஹேக்கர்கள் குழுவொன்று அபகரித்த விவகாரம் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
மேலதிக விபரங்கள்
இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற அமர்வொன்றின் ஊடாக விசேட உரையொன்றை ஆற்றி நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தேசித்துள்ளார்.

அதன்போது சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் தெளிவுபடுத்தல்களையும் அவர் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்மாத இறுதி நாடாளுமன்ற அமர்வு அல்லது அடுத்த மாத ஆரம்ப நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டு குறித்த உரையை ஆற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam